/* */

சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்

சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்தில் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டம்
X

சேலம் உருக்காலை நிர்வாகத்தை கண்டித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 

சேலம் உருக்காலையில் சுமார் இரண்டாயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆயிரம் பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் உருக்காலை நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த பணிச்சீருடை கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் உருக்காலை உணவகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் விலையும் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருக்காலை வளாகத்தில் தொமுச சார்பில் அரை நிர்வாண போராட்டம் இன்று நடைபெற்றது.

பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியர்கள் அரை நிர்வாணத்தில் கலந்துகொண்டு கையில் தட்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து நடைமுறைப்படுத்த ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 12 Jan 2022 4:30 AM GMT

Related News