/* */

'டிமிக்கி' கொடுத்து தப்பிய டிரைவர் - காரை மட்டும் கண்டுபிடித்த போலீசார்

சேலம் அருகே, பல்வேறு தடுப்புகள் அமைத்து துரத்தி சென்றும் தப்பியச் சென்ற காரை, ஒருவழியாக போலீசார் கண்டுபிடித்தனர்.

HIGHLIGHTS

டிமிக்கி கொடுத்து தப்பிய டிரைவர் -  காரை மட்டும் கண்டுபிடித்த போலீசார்
X

சேலம் அருகே பிடிபட்ட கார்

சேலம் அருகே உள்ள கருப்பூர் சுங்கசாவடியில், அண்மையில் சொகுசு கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழியில் காரை நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். ஆனால், காரை நிறுத்தாமல் ஓட்டுனர் அதிகமாக சென்றுள்ளார்.

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். காவல்துறையினர் மீது வாகனத்தை மோதுவது போல் இயக்கி, அங்கிருந்து சொகுசு காருடன் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். பின்னர் காவல்துறை ரோந்து வாகனங்கள் மூலம் பின்தொடர்ந்து சென்றபோதும், கார் மாற்று வழியில் சென்று தப்பியது. இதனைத் தொடர்ந்து தப்பி சென்ற காரினை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், அமானி கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில், சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து காவல்துறையினர் விசாரித்து, காரை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர், வழக்கு விசாரணை, கருப்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

காரின் எண்ணை வைத்து சோதனை செய்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சோகாராம் என்பவரின் பெயரில் உள்ளது தெரியவந்தது. உரிமையாளரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரில் ஏதாவது கடத்தப்பட்டதா? அல்லது ஏதாவது குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி விட்டு தப்பி வந்தார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!