/* */

சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உதவித் தொகையுடன் கூடிய இசை பயிற்சி

Salem News Today: சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உதவித் தொகையுடன் கூடிய இசை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உதவித் தொகையுடன் கூடிய இசை பயிற்சி
X

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்.

Salem News Today: சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சேலம் தளவாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனுர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு). நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முjதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை சேர்க்கைக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணசலுகை அளிக்கப்படுகிறது.

இசைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி-அஞ்சல், சேலம் -636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427-2906197 மற்றும் 94435 39772, 9994738883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Jun 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...