/* */

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு போலீசில் புகார்

ஆசை வார்த்தை கூறி பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

HIGHLIGHTS

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு போலீசில் புகார்
X

 சேலம் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த 10க்கும் மேற்பட்டோர். 

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நகைக்கடையில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், வெளியூரில் இருந்து பழைய நகைகளை மொத்தமாக வாங்கி வந்து அதை உருக்கி அதிக லாபத்திற்கு விற்க உள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 5 கோடிக்கும் மேல் பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த 15 ம் தேதி இரவு குடும்பத்தோடு வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவரிடம் பணம் கெடுத்து ஏமாந்தவர்கள் சேலம் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஜயகுமாரை விரைந்து கைது செய்து தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?