/* */

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சேலத்தில், கனமழையால் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

HIGHLIGHTS

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்
X

சேலத்தில் பெய்த மழையால்,  அழகாபுரம் பகுதி மாரிமுத்து கவுண்டர்தெரு, பூசாரி தெரு பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழந்த மழைநீர்.

சேலம் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இது, நேற்றும் தொடர்ந்தது. நேற்றிரவு சேலம் நகரம், ஆத்தூர், வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 105 மில்லி மீட்டர் அளவிற்கு மழையின் அளவானது பதிவாகியுள்ளது.

சேலம் மாநகரில், கனமழையின் காரணமாக அழகாபுரம் பகுதியில் உள்ள மாரிமுத்து கவுண்டர்தெரு, பூசாரி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரண்டு தெருக்கள் முழுவதும் தண்ணீர் அதிகளவில் நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 24 Sep 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  3. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  4. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  6. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  7. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!