/* */

சேலம் மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

சேலம் மாநகரில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

HIGHLIGHTS

சேலம் மாநகரில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
X

வீடுகளுக்குள் புகுந்த நீர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தொடங்கிய மழை, பலத்த மழையாக மாற தொடங்கியது. சேலம் சூரமங்கலம் அஸ்தம்பட்டி, 5 ரோடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, வீராணம், வீரபாண்டி, சீரகாபாடி, வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக சேலம் மாநகர் அம்மாபேட்டை நாராயண நகர், சித்தேஸ்வரா நகர், களரம்பட்டி, கிச்சிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே பாதாள சாக்கடை கால்வாய் வெட்டப்பட்டு உள்ளதால் மழைநீர் எளிதாக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழை நீரானது குளம்போல் தேங்கி நிற்கின்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?