/* */

ஆதரவற்றவர்களுக்கு உணவு, முககவசங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் முககவசங்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆதரவற்றவர்களுக்கு  உணவு, முககவசங்களை வழங்கிய  மாநகராட்சி ஆணையாளர்
X

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் ஆதரவற்ற ஏழை எளியவர்களுக்கு தன்னார்வலர்கள் சார்பில் மாநகராட்சி ஆணையாளர் கிரிஸ்துராஜ் மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்களில் வசித்து வருபவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பபட்டவர்கள், ஆதரவற்ற முதியோர் பசியினை போக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மதிய உணவு வழங்கி வருகிறது.

அம்மாபேட்டை பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சேலம் ரோட்டரி பேரிடர் மேலாண்மைக்குழு மற்றும் அழகு பூக்கள் நண்பர்கள் சார்பில் தினமும் 1000 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று அம்மாப்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உணவு பொட்டலம் மற்றும் முகக்கவசத்தினை ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கினார்.


Updated On: 23 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?