/* */

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது

சேலத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக இரண்டாம் தவணை 2 ஆயிரம் மற்றும், கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது
X

சேலத்தில்,  நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட இரண்டாம் தவணை  கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், பலரது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு, ரேஷனில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதல் தவணையாக 2000 வழங்கபட்டது. இந்த நிலையில் இரண்டாவது தவனையாக ரூபாய் 2000 ரூபாய் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு, இன்றுமுதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சேலம் மாவட்டத்தில், 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை 2 ஆயிரம் நிவாரண தொகை, இன்று முதல் வழங்கும் பணி துவங்கியது. இதனை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய், 1591 நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக்கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் நின்று இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்று செல்கின்றனர். ஒருநாளைக்கு ஒரு நியாய விலை கடைகளுக்கு 100 டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி தொகுப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 15 Jun 2021 5:21 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  5. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  6. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  7. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  8. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  9. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  10. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!