சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடு வழங்கல்

சேலத்தில் பக்ரீத் பண்டிகையைொட்டி 80 எழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு தலா ஒரு ஆடுகளை பள்ளி வாசல் நிர்வாகி வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடு வழங்கல்
X

 பக்ரீத் பண்டிகையையொட்டி 8 லட்சம் மதிப்பில் 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடுகளை பரிசாக வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகி சிராஜுதீன் குரானா.

சேலம் செவ்வாய்பேட்டை காசிம் பி மதரஸா பள்ளி வாசல் நிர்வாகியான சிராஜுதீன் குரானா ஊரடங்கு காலத்தில் இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்து தவித்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கியதுடன், மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது உணவுகளும் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டை லைன் மேடு, குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு செவ்வாபேட்டை காசிம் பி மதரஸா பள்ளிவாசல் நிர்வாகி சிராஜ்தீன் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு 8 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஆடு வீதம் வழங்கினார்.

Updated On: 21 July 2021 5:15 AM GMT

Related News