/* */

சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவி

சேலத்தில், மாற்று திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு  தேமுதிக சார்பில் நிவாரண உதவி
X

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தேமுதிக சார்பில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனோ பெருந்தொற்று அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், கூலி தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வேலையிழந்து வருமானம் குறைந்து, பலரும் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் வேலை இழந்து வறுமையில் வாடி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு, தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக சேலம் மாநகரம் பள்ளப்பட்டி பகுதி 25, 26 வது வார்டு பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு மாநகர மாவட்டம் தேமுதிக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம், செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் வேலை இழந்து வறுமையில் வாடித்தவிக்கும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு சுமார் 1 லட்சம் மதிப்பில் அரிசி பருப்பு எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்.

Updated On: 21 Jun 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி