/* */

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லை

மத்தியஅரசிடமிருந்து போதிய தடுப்பூசி கிடைத்திருந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

HIGHLIGHTS

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லை
X

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்

மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி தற்போது போடப்பட்டிருக்கும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் .

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, சேலம் வீரபாண்டி மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் இன்று 15 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 4 மணி வரை 12 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 40 ஆயிரம் முகாம் மூலம் 28 லட்சத்து 94 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் தடுப்பூசி போடப்படுவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.கடந்த அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எளிதாக தடுப்பூசி கிடைத்தபோது அதை பயன்படுத்த அப்போதைய அரசு தவறிவிட்டது. தற்போது மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்றும் கூறினார்.

செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தடுப்பூசி குறைவாகவே வழங்கி வருகிறது.எனவே கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்.தமிழகத்தில் மூன்றாம் அலை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

குழந்தைகளைத் தாக்கும் என்ற வதந்தியால் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது மற்றும் தமிழகத்தில் புதிய வகை டெங்கு பாதிப்பு இல்லை போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .கடந்த ஆட்சியில் நடமாடும் மருத்துவ குழுவில், வாகன ஓட்டுநர்களை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர்கள் மீது நிச்சயம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Updated On: 19 Sep 2021 12:00 PM GMT

Related News