திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்

சேலத்தில் மாஸ்டர் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள் கூட்டம்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள எதுவும் வெளியிடப்படாத நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

சேலம் மாநகர பகுதிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் நான்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணி முதலே திரைப்படம் திரையிடப்பட்டது.

முதல் நாள் என்பதால் காவல்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்ததை விட ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 Jan 2021 4:15 AM GMT

Related News