/* */

அதிமுக கூட்டணியில் யார் வந்தாலும் அரவணைப்போம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியில் யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம் என்று சேலத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிமுக கூட்டணியில் யார் வந்தாலும் அரவணைப்போம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
X

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி கிளைக் கழக தேர்தல் நடக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

அதனால்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் நடக்கிறது. ஜெயலலிதா காலத்தில் எப்படி கட்சி நடந்ததோ அப்படிதான் கட்சி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக தான் தற்போது கிளை கழக தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.

அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சி இருக்காது என கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. ஒரு கோடியே 44 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறோம்.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். சிலர் வேண்டும் என்று புரளி கிளப்பி விடுகிறார்கள். அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்படுகிறது. இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். ஆனால் ஒருமித்த கருத்து எடுப்பதால் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

கட்சி எழுச்சியாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. பலம் வாய்ந்த சக்தியாக அதிமுக இருக்கிறது. யாரோ ஒருவர் கட்சியை விட்டு போகிறார் என்றால் அதனால் அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை. உடலில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுகவை விட்டு போக மாட்டார்கள். தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான். தொண்டர்களும், பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்க முடியாது. யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார்கள் பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தலைவராகிவிட முடியாது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கூறி உள்ளனரே என்றகேள்விக்கு, கூட்டணி அதே நிலையில் நீடிக்கிறது. யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம் கூட்டணிக்கு வருவதும்., வராததும் அவர்களுடைய விருப்பம் என ஜெயக்குமார் கூறினார்.

Updated On: 2 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை