Begin typing your search above and press return to search.
சேலம் ரெட்டியூர் பகுதி ஏரியில் மிதந்த ஆண் சடலம்: போலீசார் மீட்பு
சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ள ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு அழகாபுரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார்.
சேலம் மாநகர் ரெட்டியூர் பகுதியில் உள்ள இஸ்மாயில் கான் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அழகாபுரம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஏரியில் மிதந்து கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவரின் உடலில் இரத்த காயங்கள் இருந்ததால் யாரேனும் அவரை அடித்து கொன்று விட்டு ஏரியில் வீசி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.