/* */

சினிமா துறையில் வரலாறு படைத்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் :அன்றும், இன்றும்.... பகுதி-2

history of salem modern theatres இந்தியாவில் அரசியலில் கோலோச்சிய 5 முதல்வர்களின் பெயர்களை தன் சம்பளப்பட்டியலில் வைத்திருந்த ஒரேநிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் தான்.

HIGHLIGHTS

சினிமா துறையில் வரலாறு படைத்த   சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் :அன்றும், இன்றும்....  பகுதி-2
X

மாடர்ன் தியேட்டர்ஸின் முகப்பு மட்டும் இன்றும் நினைவுச்சின்னமாக உள்ளது. உள்படம் :மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி. ஆர்.சுந்தரம். (கோப்பு படம்)

history of salem modern theatres

மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை சேலத்தில் நடத்திய பெருமை டி.ஆர். எஸ் எனப்படும் டி.ஆர்.சுந்தரத்தினையே சாரும். பலவிதமான கட்டுப்பாடுகளை இந்த நிறுவனத்தில் அமல்படுத்தியதால் ஒழுக்கக்கேடான செயல்கள் இங்குநடக்க வாய்ப்பே இல்லை. அப்படி மீறிநடக்கும் பட்சத்தில் உடனடி தண்டனைதான்.

இன்றளவில் சேலத்தில் ஏற்காடு செல்லும் வழியில் இதன் முகப்பினை மட்டும் நினைவுச்சின்னமாக வைத்துள்ளனர். உள்ளே இருந்த ஸ்டூடியோ அனைத்துமே குடியிருப்புகளாக மாறிவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் குடியிருப்பு என்றே பெயர் நிலைத்துவிட்டது இதன் பெருமையினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

history of salem modern theatres


மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட மஹேஸ்வரி படத்தின் போஸ்டர் (கோப்பு படம்)

history of salem modern theatres

சினிமா நகரம் சேலம்

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ அக்காலத்தில் சேலத்தில் இருந்ததால் இங்கு வராத நடிகர்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வகையில் சேலத்திற்கும் சினிமாவிற்கும் சிறந்த தொடர்பு உண்டு. சுமார் 150 தியேட்டர்களுக்கும் மேல் அருகாமையில் அமைந்த நகரம் ஒன்று உண்டு என்றால் அது சேலம் மாநகரகமாகவே இருக்கும்.

தமிழகத்தில் எந்த நடிகர் நடித்த படமாக இருந்தாலும் சரி அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மாநகரமாக சேலம் அக்காலத்தில் திகழ்ந்தது என்று கூட சொல்லலாம். சேலத்தில் ஒரு படம் சக்ஸஸ் என்றால் அது மாநிலம் முழுக்க சக்ஸஸ் என்று பொருள் கொள்ளலாம். அந்த வகையில் சேலம் ரசிகர்கள் நல்ல சினிமா ரசிப்புத்தன்மை உடையவர்களாக இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் பார்ப்பதற்குதான் தியேட்டர்கள் பாதிக்கு மேலாக குறைந்துவிட்டன.

history of salem modern theatres


மாடர்ன் தியேட்டர்ஸின் படைப்பில் உருவான மற்றொரு படந்தான் தாயுமானவர் (கோப்புபடம்)

history of salem modern theatres

மாடர்ன் தியேட்டர்ஸில் எம்.ஜி.ஆர்.

டி.ஆர்.எஸ் தயாரிப்பில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை வைத்து எல்லீஸ் ஆர். டங்கன் 1950 ல் இயக்கிய படம் ''மந்திரி குமாரி'' . அதில் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்களை புதுமை வேகம், விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.உலக அழகி கிளியோபாட்ரா என்ற ஆங்கிலத்திரைப்படத்துக்காக ஒரு நடிகை கழுதைப்பாலில் குளித்தாராம். டி.ஆர். சுந்தரம் அந்த காட்சியை தமிழ்த் திரைப்படத்தில் எடுப்பதற்காக 1000 கழுதைகளை மாடர்ன் தியேட்டர்ஸீக்கு கொண்டு வந்து, பால் கறந்து அதில் ஒருவரை குளிக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். அதேபோல யானை குதிரை போன்ற உண்மை விலங்குகளை வைத்து படம் எடுத்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் முதல் படம்

படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய சுந்தரம் தனது முதல் தயாரிப்பாக சதி அகல்யா என்ற படத்தைத் தயாரித்தார். பிற்காலத்தில் கவர்ச்சிக்கன்னியாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவி தான்இந்தப்படத்தின் கதாநாயகியாவார். 1937 ல் வெளிவந்த இப்படம் நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து பத்மஜோதி என்ற படத்தையும் புரந்தரதாஸ் என்ற கன்னடப்படத்தையும் தயாரித்தார்.1938 ல் பாலன் என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும்படம் இதுதான். இப்படமானது வெற்றிகரமாக ஓடியது. பின்னர் சுந்தரம் தயாரித்த படம் நாம தேவர். இது.தமிழில் வெளியான 100வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938 ம் ஆண்டில் மாயா மாயவன் என்ற படத்தினை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில் டி.கே. சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் இப்படத்தினை இயக்கினார்.

history of salem modern theatres


ஆங்கில படத்துக்கு இணையான ஜேம்ஸ்பாண்ட்007 படத்திற்கு இணையாக எடுக்கப்பட்ட படம் சிஐடி சங்கர் (கோப்பு படம்)

history of salem modern theatres

அலிபாபாவும் 40 திருடர்களும்

1944 ல் பர்மாராணி, 1946 ல் சுலோச்சனா,1948 ல் ஆதித்தன் கனவு, 1949 ல் மாயாவதி, 1950 ல் எம்.என். நம்பியார் நடித்து வெளியான துப்பறியும் கதை திகம்பர சாமியார், 1951 ல் சர்வாதிகாரி, 1952 ல் வளையாபதி, 1960ல் பாக்தாத் திருடன் போன்ற பல வெற்றிப்படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் எடுத்தனர்.இந்நிறுவனம் எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.

இவர் எடுத்தசில படங்கள் விபரம் வருமாறு: தட்சயக்ஞம், கம்பர், தாயுமானவர், மாணிக்கவாசகர், உத்தமபுத்திரன், பக்தகெளரி, தயாளன், மனோன்மணி, செளசௌ, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆதித்தன் கனவு, திகம்பர சாமியார், மந்திரிகுமாரி, பொன்முடி, சர்வாதிகாரி, தாய்உள்ளம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம்எங்கே?, கதாநாயகி, மகேஸ்வரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாசவலை, ஆரவல்லி, பெற்ற மகளை விற்ற அன்னை, தலைகொடுத்தான் நம்பி,வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், குமுதம், கொஞ்சும் குமரி, அம்மா எங்கே?, வல்லவனுக்கு வல்லவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, காதலித்தால் போதுமா, நான்கு கில்லாடிகள், சிஐடி சங்கர், ஜஸ்டிஸ் விஸ்வநாதன், கருந்தேள் கண்ணாயிரம், இப்படிப்பல படங்கள் உண்டு. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தைச் சித்தரிக்கும் பர்மா ராணி தமிழிலக்கியத்தில் புகழ் பெற்ற வளையாபதி . இவற்றோடு சிறுவர்களுக்கான கதை அலிபாபா இவற்றை மிகவும் சுவைப்பட எடுத்தனர். ஆர்.எஸ். மனோகரை வைத்து கைதி கண்ணாயிரம் போன்ற படங்களையும் எடுத்தனர். ஜெய்சங்கரை வைத்து பல 007 மாதிரியான துப்பறியும் படங்களையும் எடுத்திருக்கிறார். இவர்கள் எடுத்த மொத்த படங்களின் பட்டியல் அந்த நிறுவனத்தின் வாயில் விளம்பர பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

history of salem modern theatres


மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான டி. ஆர் . சுந்தரத்திற்கு கவுரவிக்கும் வகையில் 2013 ம்ஆண்டில் அவர் உருவத்தோடு வெளியிடப்பட்ட போஸ்டல் ஸ்டாம்ப்.(கோப்பு படம்)

history of salem modern theatres

மாடர்ன் தியேட்டர்ஸின் சாதனைகள்

*மாடர்ன் தியேட்டர்ஸ்தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.

*முதல் மலையாளப்படத்தை எடுத்த நிறுவனம்

*முதல் சிங்களப்படத்தினை எடுத்த நிறுவனம்

*தமிழ்நாட்டில் முதல் ஆங்கிலப்படத்தை எடுத்த நிறுவனம்

*1940 ல் பி.யூ. சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது,அலெக்சாண்டர் டமாஸ்,என்பவரின் ''The man in the iron Mask'' ஐத்தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படமாகும்.

*1942 ம் ஆண்டில் பி.யூ. சின்னப்பா மற்றும் டி. ஆர்.ராஜகுமாரி நடித்து வெளியான ''மனோன்மணி'' என்ற திரைப்படம் மிகுந்தபொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த்திரைப்படமாகும்.

*தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் (கேவாகலர்) 1956 ம் ஆண்டு இந்நிறுவனத்தின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆகும். இதை மலையாளத்தில் கண்டம் வெச்ச கொட்டு என்ற பெயரிலும் தயாரித்தார்.

*1961ம் ஆண்டு கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத்திரைப்படம் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத்திரைப்படம் ஆகும்.

*1938ம் ஆண்டு நோடானி இயக்கிய பாலன் என்ற திரைப்படமே முதல் மலையாள பேசும் திரைப்படமாக அமைந்தது.

*மாடர்ன்தியேட்டர்ஸ் தயாரித்த படம் சந்தனத்தேவன், ஆங்கிலக் கதையான ராபின்ஹுட்டைத்தழுவி இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி. எம்.பஷீர் படம் வெற்றி பெற்றது.

*தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத்திரைப்படம்,, மாடர்ன் தியேட்டர்ஸீம் , அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952 ம் ஆண்டில் முதல் ஆங்கிலத்திரைப்படத்தினை தி ஜங்கிள் தயாரித்தனர்.

*புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963 ம்ஆண்டில் வெளியான கொஞ்சும் குமரி டி.ஆர் . சுந்தரத்தின் 97 வது திரைப்படமாக அமைந்தது.

*மூன்றுதனிக்கதைகளைக் கொண்ட முதல் திரைப்படம் செளசௌ மூன்று கதைகள். கலிகால மைனர், ஸ்கூல் டிராமா, மற்றும் சூரப்புலி.

*உயர் தொழில் நுட்ப லென்ஸ் கண்டறியாத காலத்திலேயே அத்தகைய ஓர் உணர்வை உருவாக்கிய பொன்முடி பட கேமராமேனுக்கு பிரெஞ்சு அரசுவிருதளித்துப்பாராட்டியது.

*இந்தியாவின் ஐந்து முன்னாள் முதலமைச்சர்களை தனது சம்பளப் பட்டியலில் கொண்டிருந்த தனிப்பெருமைகொண்ட நிறுவனம்.

*தனது திரைப்படங்களில் தரமான தயாரிப்பு அமைய அடிக்கடி வெளியிலிருந்து இயக்குனர்களை எல்லீஸ் ஆர். டங்கன் , மணிலால், டண்டன், பொம்மன், டி.இரானி போன்றவர்களைப் பயன்படுத்தியது.

கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தொடக்க காலத்தில் இங்குதான் தங்கி பாடல்கள் எழுதி வந்தனர்.

மறைவு

1963 ல் டி.ஆர். சுந்தரம் காலமானார். இப்போது சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடத்தில் சுந்தரம் கார்டன் என்று குடியிருப்பு பகுதியாக மாறி விட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரங்கின் நுழைவு வாயில் மட்டும் தற்போது நிலைபெற்றிருக்கிறது.

இன்று

இவ்வளவு பெருமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸின் முகப்பு மட்டும் மாறாமல் உள்ளது. ஆனால் அதன் உட்புறம் நுழைந்தால் குடியிருப்புகளையே காணமுடியும். அக்காலத்தில் திரைத்துறையில் புகழ் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸின் புகழானது என்று அழியாத சரித்திரம் வாய்ந்தது. உலகம் உள்ளவரை மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயர் அனைவராலும் சொல்லப்படும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என்பதும், சேலத்திற்கு இது பெரிய பெருமையை இன்றளவில் தேடித்தருகிறது.

Updated On: 28 Nov 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  3. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  6. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  7. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  10. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...