உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்
உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகள் ரங்கோலி கோலம் வரைந்தனர்.
HIGHLIGHTS

உலக மகளிர் தின விழாவையொட்டி 5000 சதுர அடியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலம் வரைந்த கல்லூரி மாணவிகள்.
உலக மகளிர் தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பெண்கள் அமைப்பின் சார்பிலும் கல்லூரி பயிலும் பெண்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழாவையொட்டி கல்லூரி மைதானத்தில் சுமார் 5 ஆயிரம் சதுரடியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து ரங்கோலி கோலம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"ஆண்களும் பெண்களும் சமம்" என்ற தலைப்பில் வரையப்பட்ட இந்த ரங்கோலி கோலத்தில் பெண்ணின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஆணின் துணை நிச்சயம் உண்டு என்ற கோட்பாட்டின் கீழ் இந்த ரங்கோலிகோலம் காட்சிப்படுத்தப்பட்டது.
இரண்டு நாட்களாக கல்லூரி மாணவிகள் இதற்கான பெரும் முயற்சி எடுத்து மிகப்பெரிய அளவிலான கோலத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர் சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி சார்பில் பாராட்டும், நற்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.