/* */

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்

ஆயுதபூஜையை ஒட்டி சேலம் பூ மார்க்கெட்டில் , கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியை மறந்து, பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

HIGHLIGHTS

நாளை, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என பண்டிகைகள் வருவதால் இன்றைய தினம் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். அரசின் தீவிர நடவடிக்கையால் சற்று குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு, இப்பகுதியில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்களால், மீண்டும் நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் பண்டிகை காரணமாக பூக்களின் விலையும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.400க்கு விற்கப்பட்ட குண்டுமல்லி, இன்று ரூ.800 க்கும், ரூ.60க்கு விற்கப்பட்ட சாமந்தி 200 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை ரூ.700 க்கும், ஜாதி மல்லி ரூ. 240 க்கும், காக்கட்டான் ரூ. 450 க்கும், அரளி ரூ.320க்கும், நந்தியாவட்டம் ரூ.320க்கும், விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் நோய் தடுப்பு அறிவிப்புகளை அறிவித்த போதிலும் பொதுமக்கள் காதில் வாங்காமல் கூட்டம் கூட்டமாக குவிந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 13 Oct 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?