/* */

3 district inter badminton competition மோதிலால் பூப்பந்து குழு மூத்த வீரர்கள் நினைவாக 3 மாவட்ட அளவிலான நினைவுப் போட்டி

3 district inter badminton competition சேலத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களுக்கிடையேயான பூப்பந்து போட்டியானது நடந்தது.

HIGHLIGHTS

3 district inter badminton competition  மோதிலால் பூப்பந்து குழு மூத்த வீரர்கள் நினைவாக  3 மாவட்ட அளவிலான நினைவுப் போட்டி
X

கோப்பையை வென்ற அணியுடன் மோதிலால் பூப்பந்துக்குழு நிர்வாகிகள் 

3 district inter badminton competition

சேலத்திலுள்ள மோதிலால் பூப்பந்து குழு மூத்த வீரர்கள் நினைவாக சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கிடையேயான பூப்பந்து போட்டியானது நடந்தது.இம் மூன்று மாவட்டங்களுக்கு இடையேயான ஆடவர் ஐவர் பூப்பந்தாட்டப் போட்டியானதுநடந்தது.இந்த போட்டியில் ஏராளமான வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் சேலம் மோதிலால் பூப்பந்தாட்டக்குழு அணி இரண்டாமிடத்தினைப் பெற்றது.

முதல் நாள் போட்டியானது சேலம் குகை சங்கீத் தியேட்டர் அருகேயுள்ள பொதுநலப்பிரியர் சங்க மைதானம், மற்றும் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாக்அவுட் முறையில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் மொத்தம் 22 அணிகள் பங்கேற்றன. நாமக்கல் மாவட்ட அணிகள் சார்பில் 4அணிகள் பங்கேற்றது. தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் மொத்தம் 5அணிகள் பங்கேற்றன.சேலம் மாவட்ட சார்பில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன.

3 district inter badminton competition


சேலத்தில் நடந்த 3 மாவட்டங்களுக்கிடையேயான பூப்பந்து போட்டியில் மோதிலால் அணி 2 வது இடத்தினை வென்றது.

3 district inter badminton competition

போட்டி துவக்க விழாவில் மோதிலால் பூப்பந்து குழு தலைவர் ராஜசேகர் கலந்துகொண்டு போட்டியைத்துவக்கி வைத்தார். மேலும் இப்போட்டியில் துணைத்தலைவர் யுவராஜ், செயலாளர் வெங்கடரமணன், துணைச்செயலாளர்கள் சுரேஷ், கார்த்தி, மற்றும் மோதிலால் பூப்பந்து குழுவின் மூத்த உறுப்பினர் மற்றும்புரவலர்களான சுப்பிரமணி, சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். சேலம் மாநகராட்சியின் 45 வது வார்டு கவுன்சிலரும்இப்போட்டியில் பங்கேற்று சிறப்பித்தார்.

போட்டிகள் அனைத்துமே மாநில நடுவர்களான ராஜராஜன், திருச்சி கலிபுல்லா, சென்னை சச்சுதானந்தம், ஆகியோரின் தலைமையில் நடந்தது.முதல் நாள் நடந்த போட்டியில் 4 அணிகள் மட்டுமே லீக் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்ட்டது. நான்கு அணிகளில் துரை ஐவர் பூப்பந்தாட்டக்குழு தர்மபுரி, மற்றும் மாஞ்சோலை சேலம், மோதிலால் ஏ அணி மற்றும் மோதிலால் பி அணிகள் என நான்கு அணிகள் பங்கு பெற்றது.

முதல்இடத்தினை துரை ஐவர் பூப்பந்தாட்டக்குழு தர்மபுரியானது பெற்றது. இக்குழுவிற்கு பரிசுக்கோப்பையுடன் ரூ. 8 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசினை சேலம் யுவராஜ் டெக்ஸ்டைல்ஸ் லயன் சுப்பிரமணிய செட்டியார் வழங்கினார்.

இரண்டாவது பரிசினை மோதிலால் பி அணியானது வென்றது.இரண்டாமிடம் பெற்ற வீரர்களுக்கு பரிசுக்கோப்பையும் , பரிசுத்தொகை ரூ. 6 ஆயிரம் ரூபாயை சேலம் சண்முகசுந்தரம் மகன் ஆனந்தன் வழங்கினார்.மூன்றாமிடம் பெற்ற மாஞ்சோலை அணிக்கு பரிசுத்தொகை ரூ. 4ஆயிரம் ரூபாயை சென்னை ஜெயபால் வழங்கினார்.நான்காமிடம்பெற்ற மோதிலால் ஏ அணிக்கு பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரத்தை தங்கவேல் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து போட்டியை வழிநடத்திய மாநில நடுவர்களுக்கு பரிசுத்தொகையானது வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரூ. 2 ஆயிரம் பரிசுத்தொகையினை பிவி ஆர் குடும்பத்தைச் சார்ந்த பிரபாகரன், ஜெய் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர். மேலும் போட்டியின் பரிசளிப்பு விழாநிகழ்ச்சியில் சேலம் மாவட்டக்கழக தலைவர் துரைசாமி, ரமேஷ், (பொறுப்பு) செயலாளர், மோதிலால் பூப்பந்துக்கழக புரவலர் சுப்பிரமணி உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இப்போட்டிக்கு உதவியாக இருந்த எருமாபாளையம் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ்களுக்கு மோதிலால் பூப்பந்துக்குழு துணைத்தலைவர் யுவராஜ் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் இறுதியில் மோதிலால் பூப்பந்துக்குழுவின் செயலாளர் வெங்கடரமணன் நன்றி தெரிவித்து பேசினார்.

Updated On: 26 May 2023 11:57 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?