/* */

பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருச்செங்கோட்டில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த புதுப்பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து, சேலத்தில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
X

வரதட்சணை கொடுமையால், திருமணமான ஒரே மாதத்தில் பெண் தற்கொலை ( கோப்பு படம்)

திருச்செங்கோட்டில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த புதுப்பெண்ணின் உடலை வாங்க மறுத்து சேலத்தில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன், லாரி டிரைவர். இவருடைய மகள் இன்ஜினியர் வசுமதி (வயது 26)-க்கும், நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வரதட்சணை பிரச்னையால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், குடும்பத்துக்குள் பிரச்னை நீடித்தது. இதனால் அத்தியப்பன் தனது மகள் வசுமதியை, வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். திருமணமான ஒரு மாதத்துக்குள் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு விட்டதால், மனவேதனையுடன் காணப்பட்ட வசுமதி, கடந்த நவ. 30-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வசுமதி இறந்தார்.

வரதட்சணை பிரச்னையால், புதுப்பெண் தற்கொலை குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வசுமதியின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் திருச்செங்கோடு உயர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தான் வசுமதி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான வசுமதியின் கணவர் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். அதுவரை வசுமதியின் சடலத்தை பெற மாட்டோம் என்று தெரிவித்தனர். இதற்கு போலீசார், விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துவிடுவோம் என்று உறுதியளித்தனர். ஆனாலும் வசுமதியின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்த வசுமதி, வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல், துாக்குப் போட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், கடந்த மாதம் அக். 30ல் திருமணம் நடந்த நிலையில், நவ. 30ம் தேதி, அப்பெண் தற்கொலை செய்துகொண்டது, அதிர்ச்சியளிக்கிறது. திருமணமான ஒரே மாதத்தில், புதுப்பெண் இப்படி உயிரிழந்தது அவரது உறவினர்கள் மட்டுமின்றி, அக்கம் பக்கத்தில் வசிப்போரையும், அப்பகுதி மக்களையும் வேதனையடைய செய்துள்ளது. வசுமதியின் தற்கொலைக்கு காரணமான கணவர் வினோத் மற்றும் அவரது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 11 Dec 2022 9:35 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...