/* */

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது

எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
X

எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரான மணி.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரான மணி. இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

குறிப்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலி யைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் ஆனால் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே மோசடி புகாரில் சிக்கிய மணி தலைமறைவாகி முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் தனிப்படை போலீசார் மணியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மணியை அவரது சொந்த ஊரான ஓமலூரை அடுத்த நடுபட்டியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Nov 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்