/* */

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தின் மீது கார் கவிழ்ந்த விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 6 பேர் உயிர்த்தப்பினர்.

HIGHLIGHTS

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு
X
விபத்துக்குள்ளான கார்.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேலம் வழியாக சென்ற கார், கருப்பூர் பகுதியில் நிலைதடுமாறி மேம்பாலத்தின் மீதிருந்து சேலம்- சென்னை தண்டவாளத்தின் மீது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உடனடியாக காரில் பயணித்த ஆறு பேரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக தண்டவாளத்தின் மீது விழுந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். கருப்பூர் காவல்நிலையத்தினர் மேற்கொண்ட விசாரணையில் கோத்தகிரியை சேர்ந்த காரின் உரிமையாளர் ரமேஷ்குமார் காரை ஓட்டி வந்ததும், காரில் அவருடன் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் விஜய்,கார்த்திகேயன், யுவராஜ், மூவேந்தன், பிரதாப் ஆகியோர் காரில் பயணித்தத்தும் தெரியவந்தது.

ஜோலார்பேட்டையில் காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக சென்னை மற்றும் சேலம் மார்க்கத்தில் ரயில் வண்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

Updated On: 6 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்