/* */

மேச்சேரியில் தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

rs.10 lakh valuable tobacco seized at mecheri தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கடத்தும்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மேச்சேரியில் தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம்  மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
X

rs.10 lakh valuable tobacco seized at mecheri

தமிழகத்தில் புகையிலைப்பொருட்களை விற்க அரசு தடை செய்துள்ளது. ஆனால் இதனையும் மீறி பலர் கடைகளில் விற்பதால் பலர் போலீசுக்கு புகார் அளித்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து ரயில்கள், பஸ், மற்றும் லாரி, வேன்களில் இப்பொருட்கள் கடத்தி தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர்.

rs.10 lakh valuable tobacco seized at mecheri


மேச்சேரி அருகே ரூ. 10 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களைக் கடத்தி வந்த வாகனத்தினை சரக்குடன் போலீசார் பறிமுதல் செய்து டிரைவரைக் கைதுசெய்தனர்.

rs.10 lakh valuable tobacco seized at mecheri

ஒரு சில சமயங்களில் போலீசார் எல்லைப்பகுதியில் சோதனை செய்யும்போத இதனைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்கின்றனர். ஒரு சில நேரங்களில் வாகன ரோந்து போலீசாரின் சோதனையில் பல வாகனங்களில் கடத்துவது சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.உடலுக்கு கேடுவிளைவிக்கும் புகையிலைப்பொருட்களை தமிழகத்தில் பள்ளி,க ல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் உபயோகித்து வருகின்றனர்.இவர்களுக்கு உடல் ஆரோக்யம் பாதிப்பு ஏற்படுவதுடன் கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் வருவதற்கு புகையிலைப்பொருட்கள் காரணமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான் அரசு தடை செய்துள்ளது. ஆனால் அதனையும் மீறி கடத்துவதால் போலீசார் அதனைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருவது தமிழகத்தில் தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில்,மேட்டூரையடுத்த மேச்சேரியில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ளதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேட்டூரையடுத்த மேச்சேரி சாத்தப்பாடியில் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அட்டைப் பெட்டிக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 57 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சரக்கு வாகனம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரைக்கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (24) .போலீசாரின் விசாரணையில், இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Dec 2022 5:07 AM GMT

Related News