தேவூரில் 300 ஆண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம் தேவூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேவூரில் 300 ஆண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா
X

திம்மராய பெருமாள் ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் விழா.

சேலம் மாவட்டம், தேவூர் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 10 காலமாக புதிய கோபுரம் கட்டிடங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி கோவில் கும்பாபிஷேக விழா செய்ய முடிவு எடுத்தனர். கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்வாக கடந்த 19ம் தேதி சனிக்கிழமை கோ பூஜை செய்து விசேஷ மேள வாத்தியங்கள் முழங்க, கேரளா செண்டை மேளதாளத்துடன் குதிரை பசு உடன் பக்தர்கள் விமான கலசத்துடன் தீர்த்த குடம் எடுத்து கோணக்ழுத்தானூர், மயிலம்பட்டி,மேட்டுகடை, வழியாக ஊர்வலமாக சென்று தேவூர் திம்மராய பெருமாள் சன்னதியில் தீர்த்த குடம் வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பிரவேசம் , அக்னி பிரம்ம சதுஸ்தான பூஜைகள் நடைபெற்றது . 21ம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ சமேதராக திம்மராய பெருமாள் ஆலய கோபுர மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலை சுற்றிலும் திரளாக நின்று கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பினர். ஆலய கோபுரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் மூலம் பக்தருக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீ திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழிபாட்டு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேவூர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவூர், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, கோணக்கழுத்தானூர், சாத்தந்தை குல பங்காளிகள் பள்ளிப்பட்டி காருவள்ளி மூங்கிவேரி பட்டி, குண்டுகாட்டூர், மூக்கனூர், எலத்தூர், பெருமாபாளையம், குலதெய்வ பங்காளிகள் செய்திருந்தனர்.

Updated On: 23 March 2022 3:01 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    India vs Australia 2nd ODI நாளை மீண்டும் மோதல்! தொடரை வெல்லுமா...
  2. சேலம் மாநகர்
    சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை பாதுகாப்பு வசதிக்கு...
  3. பவானிசாகர்
    பர்கூர் பகுதியில் மீண்டும் நூறு நாள் வேலை: தொழிலாளர்கள் மகிழ்ச்சி
  4. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
  5. பவானி
    துவரை நடவுமுறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
  6. தர்மபுரி
    புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
  8. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்