/* */

சேலம் வழியாக கொச்சுவேலி - பெங்களூரு, தாம்பரம்- மங்களூரூ சிறப்பு ரயில்

Salem News Today: கொச்சுவேலி - பெங்களூரு, தாம்பரம்- மங்களூரூ சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் வழியாக கொச்சுவேலி - பெங்களூரு, தாம்பரம்- மங்களூரூ சிறப்பு ரயில்
X

பைல் படம்.

Salem News Today: கோடைகாலம் துவங்கியதை தொடர்ந்து ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலியிலிருந்து பெங்களூருவுக்கும், தாம்பரத்திலிருந்து மங்களூருவுக்கு கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில், கொச்சுவேலி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06083) வரும் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயம்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலத்திலிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரு - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06084) வருகிற 26ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக மாலை 4.57 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். தாம்பரம்- மங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06041) வருகிற 25ம் தேதி முதல் ஜூன் மாதம் 27ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்திலிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், குட்டிபுரம், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரூ ரயில் நிலையம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் மங்களூரு - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06042) வருகிற 26ம் தேதி முதல் ஜூன் மாதம் 28ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் மங்களூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.33 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலத்திலிருந்து 9.35 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் காலை 4.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இவ்வாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 April 2023 5:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...