/* */

சேலத்தில் 26ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26ம் தேதி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் 26ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் வருகின்ற 26.11.2022 அன்று சேலம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இம்முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

எனவே பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Nov 2022 4:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது