/* */

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் முதலாவது இறப்பு பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்   கருப்பு பூஞ்சை  நோயால் முதல் உயிரிழப்பு
X

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாரைக்கிணறு தோட்டப்பகுதியை சேர்ந்த மறைந்த புருசோத்தமனின் மகன் ராஜேஸ்வர கவுதம் (29) திருமணமாகாத இவருக்கு, தாய், தம்பி உள்ளனர். இவர் பிறவியிலேயே பார்வை குறைபாடு உள்ளவர்.

எனினும், தன்னம்பிக்கையுடன் பட்டப்படிப்பு படித்த ராஜேஸ்வர கவுதம், பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தம்மம்பட்டி பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த இவர், சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.

ஆனால், அதன்பிறகு கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று, இறுதியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கருப்பு பூஞ்சை தொற்று, மூளையை தாக்கி, ஒரு பக்கம் செயலிழக்கத் தொடங்கியது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Jun 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  2. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  4. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  5. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  7. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  8. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?