சேலம்: ஆத்தூரில் டூவிலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரில், இருசக்கர வாகனத்தில் சாராயத்தை கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர் .

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம்: ஆத்தூரில் டூவிலரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
X

சேலம் ஆத்தூரில், டூவீலரில் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்டவர்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியில், ஆத்தூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் உமா சங்கர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, ஆத்தூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26 ), மணி (26) ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து, விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு இருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 May 2021 8:36 AM GMT

Related News