தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள தந்தையின் பெயரை சொல்லி விலாசத்தை தேடுகிறார் ஸ்டாலின் - முதல்வர்

தந்தையின் பெயரை சொல்லி விலாசத்தை தேடுகிறார் ஸ்டாலின். தந்தையை சொல்லாமல் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியுமா? -தேர்தல் பரப்புரையில் முதல்வர் கேள்வி

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள தந்தையின் பெயரை சொல்லி விலாசத்தை தேடுகிறார் ஸ்டாலின் - முதல்வர்
X

தமிழகத்தில் 10 ஆண்டுகாலமாக கோரப்பசியில் இருக்கும் திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களை விழுங்கிவிடுவார்கள், எனவே மக்கள் சிக்கிவிடக்கூடாது என தமிழக முதல்வர் பரப்புரை கூட்டத்தில் எச்சரிக்கை

சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ராணிப்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆத்தூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொய் ஒன்றே மூலதனம் ; பொய்யை வைத்துதான் அவரது பிழைப்பு நடக்கிறது. திமுக ஆட்சிகாலத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோதும், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதும் மக்களுக்கு நூறு ரூபாய் கொடுத்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியவர், நாங்கள் கொடுப்பதை பார்த்துவிட்டு, ஸ்டாலின் இப்போது இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நாங்கள் அனைத்து திட்டங்களையும் வெளிப்படையாக நிறைவேற்றி வருகிறோம். விஞ்ஞான காலத்தில் ஸ்டாலின் மக்களிடம் மனுவை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி வைக்கிறார்.ஸ்டாலினை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இனி மனு எழுத வேண்டுமென்ற அவசியமே இல்லை; வீட்டிலிருந்தே 1100 எண்ணிற்கு குறைகளை தெரிவித்தால் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் இன்னும் நிறையத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.


கடந்த 10 ஆண்டுகாலமாக பல மடங்கு கோரப்பசியில் இருக்கும் திமுக, ஆட்சிக்கு வந்தால் மக்களை விழுங்கிவிடும்.திமுகவின் கோரப்பசியில் மக்கள் சிக்கிவிடக்கூடாது. அதிமுக அரசு சட்டத்தின் வழியில் நடைபெற்று வருகிறது. என்னோடு ஸ்டாலின் விவாதத்திற்கு வரமாட்டார். எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. மக்களுக்காக நிறையத் திட்டங்களை செய்திருக்கிறோம், எனவே நிமிர்ந்து நின்று வாக்காளர்களை சந்திப்போம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தால் சரி,அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என்கிறார் ஸ்டாலின். கூட்டணி என்பது வேறு ; கொள்கை வேறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் வேளாண் வளர்ச்சி,தொழில் வளர்ச்சி இரண்டும் வண்டியின் சக்கரம் போல. உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தொழிற்சாலைகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எந்த மாநிலத்திலும் வெளிநாட்டாவர் தொழில் தொடங்க முன்வராத நிலையில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க முன் வந்துள்ளனர். தமிழக அரசு பல துறைகளுக்கு சிறந்த விருதை பெற்றுள்ளது. மாணவனுக்கு தேர்வில் மதிப்பெண் போடுவது போல், கிடைக்கும் விருதுகளே சிறந்த ஆட்சிக்கு எடுத்துக்காட்டு என்று பேசினார்.

இனி தமிழகத்தில் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை; உழைப்பவர்களுக்கு மரியாதை என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும். தந்தையை சொல்லி விலாசத்தை தேடுகிறார் ஸ்டாலின். அப்பாவை சொல்லாமல் ஸ்டாலின் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மக்களோடு மக்களாக வாழ்பவர்கள் அதிமுகவினர். மக்களோடு மக்களாக வாழ்ந்தால்தான் மக்களின் பிரச்னை தெரிந்துகொள்ள முடியும்; பிரச்னை தெரிந்தால்தான் அதற்கு தீர்வு காண முடியும். உழைத்தால்தான் உழைப்பின் அருமை தெரியும்; உழைக்காமல் கஷ்டப்படாமல் பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் என்று விமர்சனம் செய்தார். உழைப்பும் மக்களின் ஆதரவும்தான் என்னை உயர்ந்த பதவிக்கு கொண்டு வந்தது என்றும் கூறினார்.

Updated On: 11 March 2021 6:30 PM GMT

Related News

Latest News

 1. மணப்பாறை
  மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 2. இலால்குடி
  திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது
 3. ஈரோடு
  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு
 5. திருப்பூர்
  திருப்பூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 6. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. பெரம்பலூர்
  குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
 8. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா
 9. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 10. தேனி
  தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா