ஆத்தூர் அருகே தாத்தா, பாட்டி வீட்டோடு எரிப்பு: பேரன் வெறிச்செயல்

ஆத்தூர் அருகே தாத்தா, பாட்டியை பேரன் தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆத்தூர் அருகே தாத்தா, பாட்டி வீட்டோடு எரிப்பு: பேரன் வெறிச்செயல்
X

தாத்தா, பாட்டியை தீவைத்து எரித்த குடிசை வீடு.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம் பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா(75). இவரது மனைவி காசியம்மாள் (70). இவர்களுக்கு தேசிங்குராஜா (திமுக பிரமுகர்), குமார், மணி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இதனிடையே மூன்றாவது மகன் குமார் என்பவரின் மகன் ரஷ்வந்தகுமாரை திமுக கட்சி பிரமுகராக உள்ள பெரியப்பா தேசிங்குராஜாவுடன் ஒப்பிட்டு அடிக்கடி பேரன் ரஷ்வந்தனை தாத்தா, பாட்டி இருவரும் கண்டித்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்வந்த்குமார் நள்ளிரவு 2.30 மணியளவில் தாத்தா, பாட்டி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டிவிட்டு குடிசை வீட்டிற்கு தீவைத்துள்ளார். மளமளவென எரிந்த தீயில் வயதான தம்பதி இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி பலியான வயதான தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் 16 வயது சிறுவன் ரஷ்வந்த்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் விசாரணை மேற்கொண்டார்.
தன்னை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டியை தீவைத்து எரித்த கொலை செய்த பேரனின் விபரீத செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Updated On: 13 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர்
  திருப்பூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 2. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 3. பெரம்பலூர்
  குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
 4. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா
 5. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 6. தேனி
  தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 7. பெரம்பலூர்
  பெரம்பலூர் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமிபூஜை
 8. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 9. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 10. கடலூர்
  கடலூரில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 12 ஆண்டு சிறை...