ஆத்தூர் தடுப்பூசி முகாம்: கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி

ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பொதுமக்களிடையே நோய் தொற்று ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆத்தூர் தடுப்பூசி முகாம்: கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி
X

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தடுப்பூசி முகாமில் திரண்ட மக்களால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது

ஆத்தூரில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பொதுமக்களிடையே நோய் தொற்று ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத்துரையும் வாக்குச்சாவடி மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. இதனிடையே, சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சுகாதாரத்துரையினரால் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மட்டும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே தடுப்பூசி போட்டு கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பொதுமக்களிடையே நோய் தொற்று பரவக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் 500 பேருக்கு மட்டும் தடுப்பூசி டோஸ் செலுத்துவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 19 Sep 2021 12:15 PM GMT

Related News