700 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு விழா

சேலம் கூலமேடு கிராமத்தில் 700 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா. சீறிப்பாய்ந்த காளைகள்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
700 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு விழா
X

சேலம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 700 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் ராமன்து வக்கி வைத்தார். இதில் சேலம் நாமக்கல் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றது. சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கிப்பிடித்தனர். இருப்பினும் பல காளைகள் வாடிவாசல் வழியாக ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை திணறடித்து எல்லைக் கோட்டை தாண்டி சென்று பல பரிசுகளை வென்றது. குறிப்பாக ரொக்கப் பணம், குத்துவிளக்கு, கட்டில், சைக்கிள்,செல்போன் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை காளைகளும், மாடு பிடி வீரர்களும் பெற்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற சில காளைகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்து விடாமல் இருந்ததால் இந்த கயிற்றில் காளையின் உரிமையாளருடன் வந்த தீபன் என்ற வாலிபர் காலில் மாட்டிக் கொண்டு இழுத்துச் சென்றதில் படுகாயமடைந்தார். இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொண்ட 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த விழாவை பார்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் ஆர்வமுடன் நேரில் வந்து கண்டுகளித்தனர்.

Updated On: 23 Jan 2021 3:15 PM GMT

Related News