/* */

பாம்பை விட பழனிசாமிக்கு விஷம் அதிகம் : மு.க.ஸ்டாலின் பேச்சு

பாம்பு, பல்லியை விட எடப்பாடி பழனிசாமிக்குதான் விஷம் அதிகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் ஆத்தூரில் நடந்த பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பாம்பை விட பழனிசாமிக்கு விஷம் அதிகம் : மு.க.ஸ்டாலின் பேச்சு
X

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்று, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை. கெங்கவல்லி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மணிகண்டன், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மணிரத்தினம், ரிஷிவந்தியம் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

வருகிற ஏப்ரல் மாதம் 6-ம்தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எல்லாம் நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடைய வேட்பாளர்களை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கணும்.

அவர்களுக்கெல்லாம் ஓட்டு கேட்ட நான், இப்போது உங்களிடத்தில் எனக்கு ஓட்டு கேட்க போகிறேன். இவர் எப்படி இங்கு வந்து ஓட்டு கேட்க முடியும்?. கொளத்தூர் தொகுதியில் தானே போட்டியிடுகிறார் என நினைப்பீர்கள். ஆனால் தமிழ்நாடு முழுவதும் நான் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன்.

மேற்கண்ட வேட்பாளர்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தான் நான் வெற்றி பெற முடியும். ஆகவே அதை மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்

இன்றைக்கு முதல்வராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஏதோ உளறி கிட்டு இருக்கிறார். அவர் எப்படி முதல்வரானார் என்ற கதை எல்லாம் சொன்னேன். அவர் எப்படி முதலவரானார் என்று உங்களுக்கு தெரியும்.

ஊர்ந்து போய் தானே. நான் ஏதோ வாய்க்கு வந்தபடி பேசுகிறேன் என்று நினைக்காதிங்க. தொலைக்காட்சியில், வாட்ஸ்-அப், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்தீங்களே. ஆகவே இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் என்ன பாம்பா? பல்லியா? என கேட்கிறாரு. பாம்பு, பல்லிக்கு இருக்கிற விஷத்தை விட பழனிசாமிக்கு தான் அதிகமான விஷம் இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து மம்தா பானர்ஜி மற்றும் கேரள சட்டப்பேரவையைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதுபோல திமுக ஆட்சி அமைத்தும் முதல் சட்டப் பேரவையில் வேளாண்சட்டங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

நெல் குவிண்டால் ரூ.8,500, கரும்பு ரூ.4,000, நிர்ணயிக்கப்படும். இப்பகுதிக்கு மேட்டூர் உபரி நீர் கொண்டுவரப்படும். தலைவாசலில் குளிர் பதனக் கிடங்கு கெங்கவல்லியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.



Updated On: 24 March 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?