/* */

ஆத்துாரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம்; அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சேலம் மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக 3 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். அதில், ஆத்துாரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

HIGHLIGHTS

ஆத்துாரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம்; அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
X

பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.

இதில் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், அருள், முன்னாள் எம்.பி. தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது;

சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 3 மாவட்டங்களாக பிரிக்கலாம். அப்போதுதான் மிகவும் பின்தங்கிய பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு பகுதிகள் முன்னேற்றம் அடையும். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளையும் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். மேட்டூர் அணை உபரி நீரை திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும். அப்போது வழியில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பினால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டு மட்டும் 450 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி அதில் தண்ணீர் விட்டால் சேலம் மாநகருக்கு ஒரு ஆண்டுக்கு தண்ணீர் பிரச்சினையே இருக்காது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றக்கோரி பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த பிரச்னையில், நானே களத்தில் இறங்கி போராடத் தயாராக உள்ளேன். கல்விக்கூடங்கள் அருகில், மதுபானக்கடைகள் செயல்படுவதை அனுமதிக்க கூடாது. உடனே, மதுக்கடைகளை அகற்ற வேண்டும். அதேபோல, போதை பொருட்கள் விற்பனை சேலம் மாவட்டத்தில் மிக அதிக அளவில் உள்ளது. அதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஆன்லைன்' ரம்மியால், இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தடை செய்யும் சட்டத்துக்கு கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது புரியவில்லை. நாளொன்றுக்கு 'ஆன்லைன்' ரம்மி மூலம் ரூ.200 கோடி வருமானம் கிடைக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் பணத்தை இழக்கிறார்கள். எனவே, 'ஆன்லைன்' ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு, உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

வரும் 2026-ம் ஆண்டில், தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதற்கு தகுந்தாற்போல 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்போம்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

Updated On: 4 Dec 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்