5,241 மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி: சான்றிதழ் வழங்கிய அமைச்சர்கள்

சேலம் மாவட்ட 5,241 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
5,241 மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி: சான்றிதழ் வழங்கிய அமைச்சர்கள்
X

கூட்டுறவுத் துறையின் சார்பில் சேலம் மாவட்ட 5,241 குழுக்களின் 51,023 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.13440 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

கூட்டுறவுத் துறையின் சார்பில் சேலம் மாவட்ட 5,241 குழுக்களின் 51,023 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.13440 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு கடன்களை 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிகன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, ரூ.2,756 கோடி கடன்கள் தள்ளுபடி செய்து ஆணை வெளியிடப்பட்டது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் தகுதியான மகளிர் சுய உதவிக் குழு கடன்களின் தள்ளுபடி பட்டியல் தயார் செய்யப்பட்டு, 31.03.2021-ஆம் தேதியில் நிலுவையில் உள்ள 5,241 குழுக்களின் 51,023 மகளிர் உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.134.40 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை வரலாற்றில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இன்றைய தினம் மீண்டும் கடனுதவிகள் வழங்கி இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.

கூட்டுறவுச் சங்கங்களில் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினராக சேருவதற்கு குறைந்தபட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் வேண்டும். தற்போது வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 இலட்சத்தில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கடன் குழுக்களின் சேமிப்பு தொகைக்கு ஆறு மடங்காக வழங்கப்படுகிறது. குறிப்பாக, 36 மாதங்களில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு அவசரக் கடன் தேவைகளை சுயமாக பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. கடன் தேவைகளுக்கு கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருப்பது முழுமையாக தவிர்க்கப்படுகிறது. மேலும் தொழில் திறன் மற்றும் விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காண்கிறது. மகளிர் செய்த உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யும் வகையில் திறனை வளர்க்கிறது. குறிப்பாக மகளிர் பெயரில் சொத்துகளை உருவாக்கச் செய்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது 6,301 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தள்ளுபடி குழுக்கள் தவிர்த்து, 2021-22ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மூலம் 819 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30.70 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மூலம் 1,780 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.52.37 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்புகள் பின்னிப் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிணைந்துள்ளன. ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூட்டுறவு அமைப்புகள் அவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்களித்து வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் அரசின் அனைத்து திட்டங்களும், சேவைகளும் மக்களை சென்றடைய பல்வேறு வகைகளில் கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகள் சிறந்த சேவையாற்றி வருகின்றன.

அந்த வகையில் தற்போது 31.03.2021 தேதியில் நிலுவையில் உள்ள சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 5,241 குழுக்களின் 51,023 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.134.40 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கான தள்ளுபடி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் சுய உதவி குழுக்களுக்கு அதிகளவு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு இயக்கம் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் பதிவாளர் இரா.மீராபாய், கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் இரவிக்குமார், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஜி.ட்டி. பாலமுருகன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Jan 2023 1:39 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...