/* */

3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து: சேலம் ஆட்சியர் தகவல்

கடந்த ஓராண்டில் 3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து: சேலம் ஆட்சியர் தகவல்
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்.

கடந்த ஓராண்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய 3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது.

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் வாகனம் ஓட்டிய 3,436 வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு முனைப்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் விளைவாக கடந்த 6 மாதங்களில் சேலம் மாநகரப் பகுதிகளில் 54% மற்றும் ஊரகப் பகுதிகளில் 46% சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலை விபத்துகளே இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய டங்களில் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாலை சந்திப்புகள், வளைவுகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெறிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், சாலைகளில் எதிர் திசையில் வாகனங்கள் ஓட்டுவதாலும், சாலைகளில் செல்லும் போது உரிய சைகை இல்லாமல் வலது, இடது திசையில் திடீர் என வாகனங்களை திருப்புவதாலும், வாகனங்களை எந்த சைகையும் இல்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்துவதாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.இரா.சிவகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாநகர காவல் துணை ஆணையர்கள் எம்.மாடசாமி, எஸ்.பி.லாவண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உட்பட தொடர்புடையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2023 1:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்