/* */

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் தின விழாவில் தீர்மானம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திருச்சியில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர் தின விழாவில் தீர்மானம்
X

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) சார்பில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் பேசினார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) திருச்சி மாவட்டத்தின் சார்பாக ஓய்வூதியர் தின விழா திருச்சி புத்தூரில் உள்ள டாக்டர் மதுரம் ஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ப.அருள் ஜோஸ் தலைமை தாங்கினார். தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஓய்வூதியர் தினவிழா

ஓய்வூதியர்களின் தந்தை என போற்றப்படும் டி.எஸ். நகரா

விழாவுக்கு தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் பேசுகையில் இன்று ஓய்வூதியர் தின விழா நடத்துவதன் நோக்கம் என்ன என்றும் நாம் ஓய்வூதியம் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணமாக இருந்த டாக்டர் டி .எஸ். நகரா குறித்தும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஓய்வூதியம் என்பது அரசின் கருணையால் அளிக்கப்படும் பிச்சை அல்ல. மாறாக வியர்வையை சிந்தி உழைத்த உழைப்பிற்கு கொடுபடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும். அரசியல் சட்ட பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-ன்படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு வேர் ஊன்றி நிலைத்த சட்டபூர்வமாக பாத்தியமாகும் என்று குறிப்பிட்டார்.

எல்லா மட்டத்திலும் ஊழல்

மாநிலச் செயலாளர் எஸ். துரைக்கண்ணு ஓய்வூதியர்களுக்கு என்னென்ன சலுகைகள் சங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது. எந்த மாநிலங்களில் எல்லாம் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அரசாங்கம் ஏன் நமது கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது என்பது குறித்து பேசிவிட்டு கவிதை படித்தார். மாநில தலைவர் ராமானுஜம் தனது உரையில் ஏன் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. சமுதாயத்தில் மக்கள் படும் துயரங்கள் என்ன என்ன எல்லா மட்டத்திலும் ஊழல் பெருகிவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நடைபெறும் மோசடி மற்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை இதுவரை அரசு வழங்காது குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

கேன்சர் நோய் தடுப்பு முறை

கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

டாக்டர் விசுவநாதன் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் இருந்து வந்திருந்த டாக்டர் கௌதமி பெண்களுக்கு புற்றுநோய் வருவதை எப்படி கண்டுபிடிப்பது அதனுடைய அறிகுறிகள் என்ன என்பதை குறித்தும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணமாக்கிவிடலாம் பயப்படத் தேவையில்லை என்றும் மிகச் சிறப்பாக எடுத்து கூறினார்.

மாவட்டத் துணைத் தலைவர் ஆர்தர் காட்வின் வாழ்த்துரை வழங்கினார். முசிறி வட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், தொட்டியம் வட்டத் தலைவர் சுதந்திர நாதன், துறையூர் வட்ட தலைவர் வரதராஜன், திருச்சி மேற்கு வட்ட தலைவர் விக்டர் ஜோசப் ராஜ், திருவெறும்பூர் வட்டத் தலைவர் தாமஸ், திருச்சி கிழக்கு வட்ட தலைவர் மரிய அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்

ஓய்வு பெறும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்வது. 2022 ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படையை நிலுவைத் தொகையுடன் வழங்க தமிழக அரசே கேட்டுக் கொள்வது. ஓய்வூதியர்களின் கம்முட்டேசன் தொகை பிடித்ததை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டாக குறைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது. ஓய்வூதியர் மருத்துவர் காப்பீடு திட்டத்தின் படி மருத்துவ செலவு தொகையை தாமதமின்றி வழங்க காப்பீட்டு திட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது.

சாலைகள் சீரமைப்பு

ரயிலில் பயணம் செய்ய முதியோர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது.பொதுவாக அனைத்து சாலைகளையும் ஏதோ ஒரு வேலைக்காக தோண்டி எடுத்ததின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் குழிகளில் தடுமாறி விழும் நிலை ஏற்படுவதை தவிர்க்க விரைவில் சாலைகளை செப்பனிட திருச்சி மாநகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வாடுகளிலும் முகாம் அமைத்து மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட இணை செயலாளர் அஜிரா பீவி நன்றி கூற நிகழ்ச்சி இனிதே தேசிய கீதத்துடன் முடிவுற்றது.

முன்னதாக கடந்த மாதம் இறந்து போன சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 18 Dec 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு