/* */

தமிழகத்துக்கு 6.25 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழகத்தில் இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தமிழகத்துக்கு  6.25 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை
X

பைல் படம்

மத்திய அரசிடம் 6.25 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கும்படி, தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவிலும் தமிழகத்திலும் சராசரியாக தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த சூழ்நிலையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் கமிஷனர் வீணா தவானுக்கு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில் 2021 ஜன., 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இதுவரை, 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு 11.93 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

தற்போது தமிழகத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர், முதல் தவணையையும்; 86 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இரண்டாம் தவணையையும்;4.42 கோடி பேர், ஊக்கத் தவணையையும் செலுத்தாமல் உள்ளனர்.ஆனால், தமிழகத்தில் எந்த தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை.

எனவே, காலாவதி ஆகும் காலம் அதிகம் உள்ள ஐந்து லட்சம், 'கோவிஷீல்ட்' தடுப்பூசிகளையும், 50 ஆயிரம் 'கோவாக்ஸின்' தடுப்பூசிகளையும், 75 ஆயிரம் 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசிகளையும் விரைவாக வழங்கி, கொரோனா பரவலை தடுக்க உதவ வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 April 2023 3:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...