/* */

ஒமிக்ரானை எளிதில் சமாளிக்க முடியும்

உலகையே அச்சுறுத்திவரும் ஒமிக்ரான் தொற்று பரவலை நாம் எளிதாக சமாளிக்க முடியும் என தொற்று குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன

HIGHLIGHTS

ஒமிக்ரானை எளிதில் சமாளிக்க முடியும்
X

ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தற்போது வரை நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றன

ஓமிக்ரான் அலை தொடங்கிய இந்த இரண்டு வாரங்களின் முடிவில் அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1.7% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

இதுவே இதற்கு முன்பு அங்கு மூன்றாம் அலையைத் தோற்றுவித்த டெல்ட்டாவின் தாக்கத்தில் தொற்றுக்குள்ளானோரில் 19% பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகினர்.

அதாவது டெல்ட்டாவினால் நூறு பேர் தொற்றடைந்தால் கிட்டத்தட்ட 20 பேர் அட்மிட் ஆகும் சூழ்நிலை இருந்தது. ஆனால் ஓமிக்ரான் மூலம் நூறு பேர் தொற்றடைந்தால் 2 பேருக்கும் குறைவாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 10 மடங்கு தாக்கம் குறைவாக இருக்கிறது

மேலும் டெல்ட்டா தொற்றை ஒப்பிடும் போது முந்தைய ஆல்ஃபா , பீட்டா , டெல்ட்டா அலைகளை விடவும் ஓமிக்ரான் மூலம் சிறார் முதல் முதியவர்கள் வரை பாதிப்பு குறைவாகவே இருப்பதைக் காண முடிகிறது.

தொடர்ந்து நம் நாட்டில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டோமானால் நிச்சயம் ஓமிக்ரான் மூலம் இங்கு மற்றொரு மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதன் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டதாகவே இருக்க அதிக வாய்ப்பை உண்டாக்க முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு

  • இரண்டு டோஸ் தடுப்பூசி
  • முககவசம்
  • தனிமனித இடைவெளி
  • கைகளை கழுவுதல்

இவற்றை தொடர்வோம்

மூன்றாம் அலையை மட்டுப்படுத்திடுவோம்

இன்னொரு லாக்டவுனை இல்லாமல் செய்வோம்

இன்னுயிர்களைக் காத்திடுவோம்

Updated On: 23 Dec 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை