/* */

மின் கம்பிகள் பழுது: நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே மின் கம்பிகள் பழுது காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

HIGHLIGHTS

மின் கம்பிகள் பழுது: நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
X

நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் ஈரோட்டில் இருந்து சேலம் மார்க்கமாக செல்லும் ரயில் நிறுத்தம் உள்ளது.

இந்த ரயில் நிறுத்தத்தில் உள்ள மின் கம்பிகள் பழுதின் காரணமாக மின்சார ரயில்கள் செல்ல முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை எர்ணாகுளத்தில் இருந்து செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை மின்கம்பி பழுதிகளுக்கு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால், ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, சேலம், குமாரபாளையம் செல்லும் பேருந்துகள் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைக்கு செல்லும் பொது மக்களும், அன்றாட பணிகளுக்கு செல்லும் பயணிகளும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் இந்த மின்சார ரயில்கள் செல்ல முன் கம்பிகள் பழுது பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதால் பழுது பார்க்கும் பணி தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய இன்று மாலை ஆகும் என ரயில் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். அதுவரை இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது உடன் ரயில்கள் பாதி வழியில் நின்றதால் ரயில் பயணிகளும் தங்கள் பயணம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 22 Oct 2023 4:59 AM GMT

Related News