/* */

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க அறிவிப்பு

HIGHLIGHTS

கொரோனாவால் இறந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
X

கொரோனா தொற்றால் இறந்த ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 25 லட்சம் ரூபாய் வழங்க அவர்களின் விபரங்களை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள், கொரோனா ஊரடங்கு நேரத்திலும் வேலைக்கு வந்து பொருட்களை வழங்கினர். இதனால், தொற்று பாதித்து சில ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ,25 லட்சம் ரூபாய் வழங்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. உயிரிழந்த ஊழியர்கள், பணியில் ஈடுபட்ட சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, கொரோனா தொற்றால் இறந்தார் என்பதற்கான மருத்துவ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய முன்மொழிவு விபரங்களை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

Updated On: 25 Sep 2021 5:15 AM GMT

Related News