வாலாஜாவில் நெற்கதிர்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த பெண்.

வாலாஜா ஒன்றிய அலுவலகத்தில் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட நெற்கதிர்களுடன் பெண் வேட்புமனுதாக்கல் செய்ய வந்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வாலாஜாவில் நெற்கதிர்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த பெண்.
X

வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட வந்த ரமணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7ஒன்றியங்களில் உள்ள 13மாவட்டகவுன்சிலர், 127,ஒன்றியகவுன்சிலர் மற்றும் 288ஊராட்சிமன்றங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட அரசியல்கட்சியினர் மற்றும் சுயேட்சைகளாகப் அந்தந்த பகுதிகளில் போட்டியிடகடந்த 15ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம்,ஆற்காடு,சோளிங்கர்,நெமிலி, திமிரி, வாலாஜாப்பேட்டை, மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.,

இந்நிலையில், வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பதவிகளுக்கான வேட்புமனுதாக்கலின்போது, வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட ரமணி என்பவர் நெற் கதிர்களுடன் வேட்பு மனுதாக்கல்செய்ய வந்தார்..

இருப்பினும் அலுவலகம் முன்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரமணியை தடுத்து நெற்கதிர்களுடன் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று தடுத்தனர்.அவற்றை வெளியே போட்டு விட்டு உள்ளே செல்லும்படி கூறினர். இதனால் வேறுவழியின்றி, வெளியே போட்டுவிட்டு ரமணி உள்ளே சென்று வேட்பு மனு தாக்கல்செய்தார் .

பின்னர் வெளியே வந்த அவர் ,தனது ஊரின் பிரதானமான தொழில் விவசாயமாகும் . எனவே நான் முழு விவசாயம் வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயற்கை விவசாயத்துக்கு ஊக்குவிப்பேன் அதற்காக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தையும் எனது கிராம மக்கள் பெற்றிடும் விதத்தில் பணியாற்றுவேன்.

அரசின் அனைத்து துறை திட்டங்களும் எனது ஊர் மக்களுக்கு அறிந்து பெற்றுக்கொள்ள தகவல் திட்டத்தை செயல்படுத்துவேன். தேவையானால்,நானே முன்நின்று செய்வேன் ஊரின் அடிப்படை வசதிகள் யாவற்றையும் நிறைவேற்ற,ஒரு கிராம தலைவர் செய்யவேண்டிய பணிகள் அனைத்துமே நேர்மையான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றாடுவேன். நல்ல கிராம தலைவர் இவர் தான் என்று முன்னுதாரணமாக இருப்பேன் என்று அந்த விவசாய பெண்மணி ரமணி கூறினார்.

அப்போது வேட்புமனு தாக்கல் செய்யவந்த திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் மற்றும் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த பலர் ரமணியைப் பாராட்டிச்சென்றனர். இந்நிகழ்வு வாலாஜாவில் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியது..

Updated On: 22 Sep 2021 3:20 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி
 2. திருநெல்வேலி
  நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் & பழங்கள் விலைப்பட்டியல்
 3. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 4. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 5. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 6. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 7. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 8. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 9. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 10. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா