/* */

வறுமை குடும்பங்களின் வாட்டத்தை போக்கிய இராணிப்பேட்டை சிப்காட் போலீசார்!

இராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணில், வறுமையில் வாடும் 50 குடும்பங்களுக்கு, சிப்காட் போலீசார் மளிகைப்பொருட்களை வழங்கினர்

HIGHLIGHTS

வறுமை குடும்பங்களின் வாட்டத்தை போக்கிய   இராணிப்பேட்டை சிப்காட் போலீசார்!
X

இராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணில் வறுமையில் உள்ள 50 குடும்பங்களுக்கு, சிப்காட் போலீசார், அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி உதவினர்.

இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதி அருகே, நவ்லாக் புளியங்கண்ணு கிராமம் உள்ளது. இங்கு, சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அப்பகுதியில். பல ஏழ்மைக் குடும்பங்கள் உணவுக்கு வழியின்றி வறுமையில் உள்ளனர். இதுபற்றிய தகவல், சிப்காட் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையில், எஸ்ஐ. சிதம்பரம் முன்னிலையில், அப்பகுதியில் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் உள்ள 50 குடும்பங்களுக்கு, அரிசி, மளிகைப்பொருட்களை போலீசார் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், போலீசாருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

#ranipet #police #help #lockdown #instanews #corona #covid #coronavirus #covid_19 #tamilnadu #covidvacccine #staysafe #virus #stayathome #socialdistancing #tamilnadu #government

Updated On: 7 Jun 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!