/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பச்சை பயறு, உளுந்து கொள்முதல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பச்சை பயறு, உளுந்து கொள்முதல்
X

காட்சி படம் 

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடப்பு ஆண்டில் பச்சை பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் பச்சைப்பயறு சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 என்ற விலைக்கும், உளுந்து சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.63 என மத்திய அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு ஆண்டில் பச்சை பயிறு 100 மெட்ரிக் டன்னும், உளுந்து 150 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 15.5.22-ந்தேதி வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நில சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். விலைப் பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குனர், வேளாண் வணிகம், ராணிப்பேட்டை, வேலூர் விற்பனை குழு செயலாளர், காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகலாம்.

Updated On: 28 April 2022 2:39 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?