/* */

குறுவை பருவபயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுவை பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

குறுவை பருவபயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காரீப் பருவ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயகள் இணைய மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புயல்,வெள்ளம் மழைநீர்தேக்கம்,வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், மற்றும் பூச்சீ, நோய் தாக்குதலால் சேதமடைந்து பாதிப்படைந்து வரும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க பயிர்காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22ஆண்டு பிரதம மந்திரியின் திருத்திய பயிர்காப்பீடு திட்டம், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் இயங்கிவருகிறது..

இத்திட்டத்தில் 2021-22க்கான குறுவை பருவத்தில் துவரை, நிலக்கடலை, வாழை மற்றும் மஞ்சள் ஆகியவற்றிற்கான காப்பீடுத்தொகை செலுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடன்பெற்ற மற்றும் பெறாத விவசாயிகளுக்கு ஒரே விதமான காப்பீட்டுத் தொகை மற்றும் காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது. மேலும் பயிர்களுக்கான காப்பீடு பிரிமியம் செலுத்தவேண்டிய தொகை விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.அதில் ஒரு ஏக்கரில், நிலக்கடலைக்கு ரூ. 535/-, ,துவரைக்கு ரூ.342/- மஞ்சளுக்கு ரூ2645 /- ,வாழைக்கு 2605/- ஆகியவை பிரிமியமாக செலுத்த விவசாயிகளைக் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், திட்டத்தில் சிறுகுறு விவசாயிகள், கடன் பெற்ற , பெறாத அனைவருக்கும் ஏற்ற திட்டமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகவே விவசாயிகளுக்கு, நிலக்கடலை,துவரை ஆகியப்பயிர்களுக்கு பிரிமியம் செலுத்த கடைசித் தேதி ஆகஸ்ட் 31 என்றும், வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு பிரிமியம் செலுத்த கடைசி தேதி 15-9-2021 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்திலுள்ள விவசாயிகள் குருவை பருவ பயிர்களுக்கான காப்பீடு கட்டணத்தை உரிய காலத்தில் அந்தந்த பகுதியில் தேசியமயமான வணிக வங்கிகள், பொது சேவைமையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் செலுத்த வேண்டும். மேலும், பிரதம மந்திரியின் திருத்திய பயிர்காப்பீடு திட்டத்தில் இணைந்து பயனடைய நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக்கணக்குப் புத்தகம், ஆகியவற்றுடன் விவசாயிகள் பெயர், விலாசம், நிலப்பரப்பு, சர்வே எண் , உட்பிரிவு,பயிரிட்டுள்ள நிலம் சார்ந்த கிராமம் ஆகிய விபரங்களை தெளிவாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களை அறிந்துகொள்ள சம்பந்தபட்ட பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Updated On: 24 Aug 2021 10:21 AM GMT

Related News