/* */

இராணிப்பேட்டையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

இராணிப்பேட்டை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
X

ராணிப்பேட்டை திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்

இராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட உறுப்பினர்களுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் இராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே நடந்தது

கூட்டத்தில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறையமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மற்றும் மாநில சுற்றுசூழல் துணைசெயலாளர் விநோத் காந்தி ஆகியோர் பேசினர்.

அதனைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச் செயலாளரும்,நீர் ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகள் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

அப்போது நீங்கள் தயக்கமின்றி மக்களிடம் வாக்குறுதிகளை அளித்து ஓட்டு சேகரியுங்கள். நகராட்சி வார்டுகளில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை சரிசெய்வது வார்டு உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றை நிறைவேற்ற தேவையான நிதிகளைப் பெற்றுத்தர அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் என நாங்கள் உள்ளோம் தைரியமாக அரசின் சாதனைக்கூறி வாக்குகள் சேகரியுங்கள் என்றார்.

நிகழ்ச்சிக்குபின்பு செய்தியாளர்களை சந்திப்பில், நீட்விவகாரம் குறித்து ஸ்டாலினை பொதுவிவாதத்திற்கு பழனிச்சாமி அழைத்தது குறித்து கேள்விக்கு அவர் ,

எடப்பாடி பழனிச்சாமி சிறந்த கல்விமான், மேதை. சட்டசபையில் அவருக்கு பேச வாய்ப்பளித்தபோது பயன்படுத்தாதவர். இப்போது விவாதத்திலா பேசப்போகிறார் . நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி சட்டப் பேரவையில் பேசஅதிக நேரம் அளிக்கப்பட்டது. அதிகநேரம் வழங்க வேண்டும் என்று கேட்டதின் பேரில் வழங்கப்பட்டும் பேசாதவர் பொதுவிவாதத்திலா பேசப்போகிறார் என்பது வியப்பளிக்கிறது.

கூட்டத்தில் திமுக,காங்கிரஸ் மற்றும் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 11 Feb 2022 3:53 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்