/* */

குட்கா, போதைப்பொருட்களை கடத்தி விற்பவர் மீது குண்டர் சட்டம்; விக்கிரமராஜா கோரிக்கை

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

HIGHLIGHTS

குட்கா, போதைப்பொருட்களை கடத்தி விற்பவர் மீது குண்டர் சட்டம்; விக்கிரமராஜா கோரிக்கை
X

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடந்த மறைந்த சங்க நிர்வாகிகளின் படத் திறப்பு நிகழ்ச்சியில் விக்கிரமராஜா.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், மறைந்த சங்க நிர்வாகிகளின் படத் திறப்பு மற்றும் இரங்கல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு படங்களை திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடைபிடிப்பதில் தெளிவாக உள்ளது.

கொரோனா காலங்களில் வியாபாரிகளை அதிகாரிகள் படிப்படியாக தண்டனை வழங்க வேண்டுமே தவிர, கடையை மூடி சீல் வைக்கக்கூடாது . தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரும் மொத்த வியாபாரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையிலடைக்க வேண்டுமென என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வியாபாரிகளை விட அன்றாட ஏழை, எளிய, கூலித் தொழிலாளிகள் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதை கண்டிக்கும் வகையில் சங்கம் விரைவில் ஆட்சி மன்றக் கூட்டம் கூட்டப்பட்டு போராட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

அதேபோல், போதைப் பொருள்களை தடை செய்யப்பட்டதை போன்று பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்துவது குறித்து கேட்டதற்கு, அரசும், வியாபாரிகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து தவிர்த்து வெற்றிபெற முடியும்.

கடந்த அரசை விட இந்த அரசு சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. எங்களுடைய கருத்தை கேட்டறிந்து பிளாஸ்டிக் தடை என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், கொரோனா பேரிடர் காலங்களில் அதை பின்பற்ற முடியாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பேரிடர் காலங்களில் அதிகாரிகள் வியாபாரிகளை மீண்டும் நசுக்காத வண்ணம் படிப்படியாக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிப்போம்.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை வெட்டி வருகின்றனர். வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு 10 மரம் நட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் பல சாலைகளில் மரங்கள் இல்லாமல் காட்சி அளிக்கிறது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நெடுஞ்சாலையில் வரும் போது பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்து சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆறு வழிச்சாலை என்ற அறிவிப்பார்கள்; ஆனால் சாலை போடுவதற்கு முன்பே ஆறு வழிச்சாலை கட்டணம் வசூலிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

சென்னை குரோம்பேட்டை மளிகை கடை சிவசுப்பிரமணியன மீது வழக்கறிஞர் தாக்குதல் குறித்து கேட்டதற்கு, வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை என்பது இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. இது சம்பந்தப்பட்ட 4 பேர் மீது கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது குண்டாஸ் பதிவு செய்யப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

அதேபோன்று சங்கத்தின் கோரிக்கையில் வழக்குப்பதிவு செய்ததை போன்று, வழக்குகளை நீண்டகாலம் எடுத்துச் செல்லாமல் குண்டாஸ் முடிவு அடைவதற்குள் வழக்கு நிறைவடைய வேண்டும் என்றும், சங்கத்தின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால் வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்புடன் இருக்க ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 25 July 2021 9:35 AM GMT

Related News