தேர்தலில் வெற்றிப் பெற சுறுசுறுப்பாக உழைக்கவேண்டும்: எடப்பாடி பேச்சு

இராணிப்பேட்டை அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், வெற்றிபெற எறும்பு,தேனீ போல சுறுசுறுப்பாக உழைக்கவேண்டும் என எடப்பாடி பேச்சு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேர்தலில் வெற்றிப் பெற சுறுசுறுப்பாக உழைக்கவேண்டும்: எடப்பாடி பேச்சு
X

இராணிப்பேட்டை அதிமுக தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் பேசும்போது, நாம் மக்கள் நலன்களுக்கு எதுவும் செய்யவில்லை என திமுக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது. ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாகவும், அரக்கோணத்தை கோட்டமாகவும் உருவாக்கி தந்தது, கிராமப்புற விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து தேவைகளை நிறைவேற்றியது அதிமுக என கூறினார்.

மேலும், நான் முதல்வராவேன் என கனவில் கூட நான் நினைத்தது இல்லை , அதிமுகவில் விசுவாசமாக இருந்தால் தொண்டன் கூட முதல்வராகலாம் ஆனால் திமுகவில் முடியாது. அதிமுகவிலிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக சட்டமன்ற தேர்தலில் சற்று சுணக்கமடைந்து விட்டது ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் எறும்பு,தேனீயைப்போல சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வெற்றிபெற உழைக்கவேண்டும். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள்அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி, ,பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற அதிமுக துணைக்கொறடா,மாவட்ட செயலாளர் அரக்கோணம் சு.ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Updated On: 23 Sep 2021 4:33 PM GMT

Related News