/* */

அம்மன் சிலை மீது சமூக விரோதிகள் ஆபாச செயல்: இந்து முன்னணியினர் புகார்

காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது ஆபாச செயல் செய்த சமூக விரோதிகளைக்கைது செய்ய இந்து முன்னணியினர் புகார்

HIGHLIGHTS

அம்மன் சிலை மீது சமூக விரோதிகள் ஆபாச செயல்:  இந்து முன்னணியினர் புகார்
X

அம்மன் சிலைக்கு அணிவித்த ஆடைகள் எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச்சேர்ந்த கொண்டாபுரத்தில் காமாட்சி அம்மன் உடனுறை பஞ்சலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் . கோயிலின் வெளிபிரகாரத்தில் உள்ள தனிசன்னதியில் காமாட்சியம்மனின் சிலை உள்ளது. தற்போது இந்து அறநிலையத் துறைக்கட்டுப்பாட்டில் உள்ள அக்கோயிலை காவேரிப்பாக்கத்தைச்சேர்ந்த சிவபக்தர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிரதோஷத்தினத்தன்று கோயில் நிர்வாகி இரவு பூஜையை முடித்துச் சென்றார் பின்பு, மறுநாள் கோயிலுக்கு வந்த நிர்வாகி அம்மன் சிலைக்கு அணிவித்த ஆடைகள் எரிக்கப்பட்டிருந்த நிலையில் சிலையின் மீது ஆபாசமான செயல்களை சமூக விரோதிகள் செய்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனே காவேரிப்பாக்கம் போலீஸில் புகார் செய்தார் .

ஆனால் போலீஸார் இதுதொடர்பாக எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சமூக விரோதிகள் இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனையடுத்து எஸ்பி தனிப்படை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். மேலும் கோவில் நிர்வாகத்திடம் கோயிலை சுற்றி சிசிடிவி கேமரா அமைக்கவும் கோயிலில் வாட்ச்மேன் வைக்கவும் காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது . மேலும் சமூக விரோதிகள்,கோயில் கருவறைக்குள் சென்று அம்மனின் சேலையை எரித்து ஆபாச செயல்களில் ஈட்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 July 2021 11:09 AM GMT

Related News