/* */

அரசு உத்தரவுபடி விநாயசதுர்த்தியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசு உத்தரவுபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

HIGHLIGHTS

அரசு உத்தரவுபடி  விநாயசதுர்த்தியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
X

ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் கொரோனாத் தொற்றைத்தடுக்க மக்கள் அதிகளவில்கூடுவதைத்தவிர்க்க கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்திட , மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில், பக்ரீத் ,ஓணம் பண்டிகையில் மக்கள் கூடி விதிகளை மீறியதால் அங்கு நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

எனவே , தமிழகத்தில் 15.09.2021 வரை சமய விழாக்களுக்குஅரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை இராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், அனைத்து சமயதலைவர்களை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதம் சார்ந்த ஊர்வலங்கள், திருவிழாக்கள்,. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்த தடை உள்ளது. விநாயகர் சதுர்த்தியில் பொது இடங்களில் சிலைகளை நிறுவி, விழா கொண்டாட . சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதியில்லை., பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே,விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட்டு, தனியாகச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதில் அமைப்புகள் ஈடுபடுட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வீடுகளில் வழிபட்ட சிலைகளை ஆலயங்களின் உள்ளேயோ, வெளியிலோ (அ) சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்லலாம். பின்னர் அவை், இந்துசமய அறநிலையத்துறையின்மூலம் முறையாக கரைக்கப்படும்.

மேலும் மக்கள்,பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் போது,முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுறது . மீறுபவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.என்று அறிவித்துள்ளார். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்குமாறும், கைகளை அடிக்கடி சோப்பு ,கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

நோய்குறித்து அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை,சிகிச்சை பெற அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழித்திட உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 31 Aug 2021 2:43 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்