/* */

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை பாரதிநகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

ராணிப்பேட்டையில் ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் 

தமிழகத்தின் 38வது மாவட்டமாக வேலூரிலிருந்து இராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்டத்தை கடந்த 2019 நவம்பர் 28ல் அன்றைய முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இராணிப்பேட்டை அருகே உள்ள தமிழ்நாடு கால்நடை நோய்த்தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையத்தையொட்டி உள்ள இடத்தில் ரூ.112 கோடி மதிப்பில் புதிய அலுவலம் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பாராஜ் இன்று அலுவலக கட்டுமானப்பணிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தினார் அதில் கட்டிடப்பணிகள் குறித்த சந்தேகங்களை அங்கிருந்த பொறியாளர்கள்மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து பணிகளை திட்டமிட்டப்படி விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார.

பின்னர் இராணிப்பேட்டை காரை கூட்ரோடு அருகே நடைபெற்று வரும். இரயில்வே மேம்பால பணி நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நான்குவழி சாலைக்கான சாலைவிரிவாக்கம் குறித்து கேட்டறிந்தார். பணிகள் நடக்கும் போது பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பு வராமல் பணிகளைத் தொடர ஆலோசனைகளை வழங்கினார். இதனையடுத்து அவர் முத்துக்கடை ஜங்ஷனுக்குச் சென்று சாலை விரிவாக்கப்பணி நடக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதைகள் குறித்து போக்குவரத்து அதிகாரிகள், பொறியாளர்களுடன் ஆலோசித்தார்.

Updated On: 25 Jun 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...